Wednesday, December 19, 2012

All mobiles solution

குறைந்த விலை பாப்லெட்


சாம்சங் தனது புதிய தயாரிப்பான கேலக்ஸி கிராண்டை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த கேலக்ஸி கிராண்ட் குறைந்த விலைகொண்ட ஆன்ட்ராய்டு பாப்லெட்டாக இருக்கும். இதிலும் கேலக்ஸி Sயைப் போன்றே அகலமான 5 அங்குலத்திரை உள்ளது. அதாவது 800 x 480 ரெசுலூசன் கொண்ட திரை. இதில் 1.2 GHz திறனுள்ள ப்ராசசெர் உள்ளது. சாம்சங் ஆன்ட்ராய்டு ஸ்மார்ட் போன்களில் உள்ள பல சிறப்பம்சம்கள் இதிலும் உள்ளது. மேலும் 8 மெகாபிக்சல் ரியர் கேமரா மற்றும் 2 மெகாபிக்சல் அளவுள்ள ப்ரன்ட் கேமரா கொண்டது. இந்த புதிய சாதனம் ஆன்ட்ராய்டு 4.1 இயங்குதளத்தை அடிப்படையாகக்கொண்டு செயல்படுகிறது. மேலும் இதிலுள்ள சிறப்பம்சம்களாவன, ஒரேநேரத்தில் இருவேறு அப்ளிகேசன்களை உபயோகிக்க முடியும்.
S-வாய்ஸ் என்ற அமைப்பு. வீடியோ பாப்பப் மூலமாக வீடியோவை சிறிய அளவில் வேறொரு திரையில் பார்க்கலாம். இதன் விலை மற்றும் வெளிவரும் நாட்கள் மட்டும் சாம்சங் நிறுவனத்தால் வெளியிடப்படவில்லை.



Tuesday, December 18, 2012

தண்ணீருக்குள் போட்டோ எடுக்கும் - ஆண்ட்ராய்ட் 3ஜி மொபைல்

                                                                 
ஜப்பானில், மொபைல் போன் தயாரிப்பதில், முதல் இடத்தில் இருந்து வரும் ப்யூஜிட்ஸு நிறுவனத்துடன் இணைந்து, தண்ணீர் புகாத ஆண்ட்ராய்ட் மொபைல் போன் ஒன்றை, டாடா டொகோமா நிறுவனம் விற்பனைக்குக் கொண்டு வந்துள்ளது. ப்யூஜிட்ஸு எப்074 என அழைக்கப்படும் இந்த மொபைல் போனில் ஆண்ட்ராய்ட் பதிப்பு 4 பதியப்பட்டு இயங்குகிறது. 4 அங்குல வண்ணத்திரை, AMOLED டிஸ்பிளே, 1.4 கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் ஸ்நாப் ட்ரேகன் ப்ராசசர், 5 மெகா பிக்ஸெல் கேமரா, 1400 mAh திறன் கொண்ட பேட்டரி, 512 எம்பி ராம் நினைவகம், 1 ஜிபி உள் நினைவகம், வைபி மற்றும் புளுடூத் ஆகியன இதன் இயக்க சிறப்புகளாகும். இவற்றைக் காட்டிலும் மிகச் சிறப்பான இதன் தன்மை, தண்ணீருள் சென்று இதனை இயக்கலாம் என இந்நிறுவனம் அறிவித்துள்ளது. நீருக்குள் இருந்தவாறே போட்டோ எடுக்கலாம். ஸ்கிராட்ச் எதுவும் விழாத வகையில் இதன் ஸ்கிரீன் அமைந்துள்ளது. இதன் பேட்டரி 1,400 mAh திறனுடன் உள்ளது. இதன் தடிமன் 6.7 மிமீ.; எடை 105 கிராம். சூரிய ஒளியில் இந்த போனின் திரை அதன் டிஸ்பிளே தன்மையை மாற்றிக் கொள்கிறது. இதில் இயங்கும் Motion Conscious Audio system என்னும் தொழில் நுட்பம், சுற்றுப்புறச் சூழ்நிலையை உணர்ந்து, வரும் அழைப்பின் ஒலியின் தன்மையை மாற்றுகிறது. இந்த ஸ்மார்ட் போனின் விலை ரூ.21,900.
தொடக்கத்தில் இது டாட்டா டொகோமோ நிறுவன வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே கிடைக்கும். இதனை வாங்கும் டாட்டா டொகோமோ வாடிக்கையாளர்களுக்கு பிரிமியம் எண் இலவசமாக வழங்கப்படுகிறது. 3ஜி டேட்டா வரையறை இன்றி 1ஜிபி வரை பயன்படுத்தலாம். ரூ. 899 ஜி.எஸ்.எம். போஸ்ட் பெய்ட் இணைப்பினை வாங்குவோருக்கு, எந்த நெட்வொர்க் இணைப்பில் உள்ள எண்களுக்கும் எஸ்.டி.டி. மற்றும் உள்ளூர் அழைப்புகள் இலவசமாக வழங்கப்படுகிறது. மற்ற திட்டத்தில் இணைபவர்களுக்கு, பிரிமியம் எண், மூன்று மாதத்திற்கு 3ஜி அலைவரிசையில் 1 ஜிபி டேட்டா இலவசம். 
ஜப்பான் நாட்டின் மொபைல் போன் தயாரிப்பு நிறுவனங்கள், இது போல பல சிறப்புகள் கொண்ட போன்களைத் தயாரித்தாலும், சோனி தவிர மற்ற நிறுவனங்கள், வெளிநாடுகளில் விற்பனையில் வெற்றி பெற இயலவில்லை. ஷார்ப் மற்றும் பானாசோனிக் நிறுவனங்கள் என்ன முயன்றும் வெற்றி பெற இயலவில்லை. FujitsuF074/ujitsuF074Waterproof3GPhone ஆனால், ப்யூஜிட்ஸு நிறுவனம், இங்கு மொபைல் போன் சேவை வழங்கும் டாட்டா டொகோமோ வழியாக நுழைந்துள்ளது. டாட்டா டொகோமோ நிறுவனத்தின் வாடிக்கையாளர் எண்ணிக்கை பெரிய அளவில் இல்லை என்றாலும், போனின் சிறப்பான அம்சங்கள், ப்யூஜிட்ஸு நிறுவனத்திற்கு பெயர் வாங்கித் தரலாம்.

மொபைல் திரையை வளைத்து மடிக்கலாம்

                                             
பொதுவாக மொபைல் போன்களை பாக்கெட்டில் வைத்து எடுத்துச் செல்கிறோம். சில மாடல்கள், திரைப் பகுதியைக் கீழ் பகுதியின் மீது மடித்து வைக்கின்ற வகையிலும், சில ஸ்லைடிங் முறையில் சுருக்கி வைக்கின்ற வகையிலும் வடிவமைக்கப்பட்டிருக்கும். எந்த நிலையிலும், ஸ்கிரீன் மடக்கப்படாமல் தான் இருக்கும், இருக்க முடியும்.
இதிலும் ஒரு புதுமையை சாம்சங் நிறுவனம் கொண்டு வர இருக்கிறது. மொபைல் போன் திரையை வளைத்து மடித்து எடுத்துச் செல்லும் வகையில் திரைப் பகுதியை அமைக்க இருக்கிறது. திரைப் பகுதியை வளைத்து அமைப்பதில் பல ஆண்டுகளாக, எல்.ஜி., பிலிப்ஸ், ஷார்ப், சோனி மற்றும் நோக்கியா ஆகியன கடும் ஆய்வினை மேற்கொண்டு வருகின்றன. ஆனால், இதில் ஜெயிக்கப் போவது சாம்சங் தான் எனத் தெரிகிறது. வரும் காலக்ஸி எஸ் 4 மற்றும் காலக்ஸி நோட் 3 சாதனங்களில், இந்த வளைக்கக் கூடிய திரை வரலாம். இவற்றின் திரையை வளைக்கலாம், மடிக்கலாம், சுருட்டியும் வைக்கலாம். வரும் 2013ல் இந்த வகைத் திரையுடன் மொபைல் போன் வரும் பட்சத்தில், மொபைல் போனைக் கீழே போட்டால் என்னவாகும் என்ற பயமின்றி பயன்படுத்தலாம்.

ஸ்மார்ட் போன் பயன்பாட்டில் இந்தியா

மொபைல் போன் சந்தையில், ஸ்மார்ட் போன் பயன்பாடு மிக வேகமாக வளர்ந்து வருகிறது. உலக அளவில் இந்தியா, இந்த வகையில் ஐந்தாவது இடத்தில் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆண்டுக்கு ஆண்டு இதன் வளர்ச்சி தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இணையத்தில் புதிதாக இணைபவர்களின் எண்ணிக்கையில், இந்தியா இரண்டாவது இடம் கொண்டுள்ளது. 2012 ஆம் ஆண்டின் இறுதி மூன்று மாதங்களில், இதுவரை 4 கோடியே 40 லட்சம் ஸ்மார்ட் போன்கள் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டுள்ளன. முதல் இடத்தில் பிரேசில், அடுத்து ஜப்பான், அமெரிக்கா மற்றும் சீனா ஆகிய நாடுகள் உள்ளன. 
இந்தியாவில், மொத்த மொபைல் போன்களில் 4% என்ற அளவில் ஸ்மார்ட் போன்கள் உள்ளன. இதனால், ஆண்டுக்கு ஆண்டு 52% என்ற அளவில் இதன் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்த வளர்ச்சி சீனா மற்றும் அமெரிக்காவினைக் காட்டிலும் அதிகமாகும். உலக அளவில், தற்போது நூற்றி பத்து கோடி ஸ்மார்ட் போன்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. ஆப்பிள் நிறுவனத்தின் தயாரிப்புகளில், தற்போது ஐபேட் விற்பனை ஆறு மடங்காக அதிகரித்து வருகிறது. ஐ போன் விற்பனையைக் காட்டிலும் மிக அதிக வேகத்தில் இதன் விற்பனை உள்ளது.
இணையப் பயன்பாட்டினைப் பொருத்த வரை, 2008–12 ஆண்டுகளில் 8.8 கோடி பயனாளர்கள் இருந்த நிலையில், இப்போது 13 கோடியே 70 லட்சம் பேர் உள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் 26% இந்தப் பிரிவு வளர்ந்துள்ளது. இந்த வகையில் சீனா முதல் இடத்தில், மொத்தம் 53 கோடியே 80 லட்சம் பேர் இணையப் பயனாளர்களாக உள்ளனர். மொத்த ஜனத்தொகையில் 40% பேர் இணையத்தைப் பயன்படுத்துகின்றனர். இந்தியாவில் இணைய ஜனத்தொகை, மொத்த ஜனத்தொகையில் 11% மட்டுமே. பன்னாட்டளவில் இணையப் பயன்பாட்டினையும், மொபைல் பயன்பாட்டினையும் ஆய்வு செய்த மேரி மீக்கர் என்ற ஆய்வாளர் இந்த தகவல்களைத் தெரிவித்துள்ளார்.

Friday, December 7, 2012

இந்தியாவில் ஆப்பிள் நிறுவனம் ஐடியூன்ஸ் ஸ்டோர் அறிமுகம்

டெல்லி: வாடிக்கையாளர்கள்  இசை, திரைப்படம் வாங்க ஆப்பிள் நிறுவனம் ஐடியூன்ஸ் ஸ்டோர் (iTunes store) அறிமுகம் செய்துள்ளது. இந்தியாவில் ஐடியூன்ஸ் ஸ்டோர் (iTunes store) முக்கியத்துவம் மற்றும் பாலிவுட் உள்ளடக்கத்தை கொண்டுள்ளது. ஏப்ரல் 2003ல் அமெரிக்காவில்  மட்டுமே ஐட்யூன்ஸ் மியூசிக் ஸ்டோர் (iTunes music store) அரங்கேறியது. இதில் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் சேர்க்கப்பட்டது  இன்று வரை 12 ஆசிய நாடுகளில் விரிவாக்கம் செய்து, ஏறத்தாழ 97 நாடுகளில் கிடைக்கிறது.

இந்தியாவில் ஐடியூன்ஸ் ஸ்டோரில்  பாடல்கள் மற்றும் திரைப்படங்களின் விலை மிகவும் மலிவாக உள்ளது. பிளிப்கார்ட் விலையை ஒப்பிடுகையில் புதிய பாடல்கள் விலை ரூ.15 எனில் இதில் ரூ.12 க்கு விற்கப்படுகிறது.  இதேபோல் திரைப்படம் வாடகைக்கு ரூ. 80க்கும், விற்பனைக்கு ரூ. 120, ரூ. 290, மற்றும் ரூ. 490  என்ற விலைகளில் கிடைக்கிறது. ஆனால் பல்வேறு பிற சர்வதேச சந்தைகள் போல டி.வி  நிகழ்ச்சிகள் இடம் பெறவில்லை. சமீபத்திய ஐடியூன்ஸ் ஸ்டோர் விரிவாக்க பகுதியாக ரஷ்யா மற்றும் இந்தோனேஷியா ஆகியவை அடங்கும்.